தமிழில் நல்லதோர் இணையத்தினை முன்வைக்கவேண்டும் என்பதே என் எண்ணம். எவ்வளவோ நல்ல இணையங்கள் ஏலவே இருக்கின்றன, இருந்தும் நானும் என்னுடைய முயற்சியால் ஒரு தமிழ் நூல்களின் தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய கற்கைகளை செய்துபார்க்கும் களமாகவும் இதனை உருவாக்கி மேம்படுத்தி வருகின்றேன்.

எவ்வித இலாபகரமான விடயங்களும் இன்றி தனியே, செய்துவிடவேண்டும் என்ற கருத்தே என் எண்ணத்தில். விடயங்கள் வேறு இணையங்களில் இருந்தும் எடுக்கப்படுவதால், இலக்கண, எழுத்துச் சீரின்மைகள் இருக்கலாம்.

காலப்போக்கில் எல்லாம் சீராக்கப்படும், நிறைய மாற்றங்கள் செய்ய விருப்பம், என்னோடு இணைத்திருக்கும் நல்ல மனங்களும் கருத்துக்களும் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள வழி செய்யும்.

அன்புடன் செ.அ.சுரேஸ்குமார். [http://www.facebook.com/saskumar]


அரசடி குறுக்கு வீதி,
கரவெட்டி வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம், இலங்கை.
தொலைபேசி : 0 (094) 71 53 64 797

கடி சக்ராசனம்

கடி என்றால் சமஸ்கிருதத்தில் நெஞ்சு என்று பொருள். அதன்படி கடி சக்ராசனம் என்பது நெஞ்சு சுழலும் ஆசனம் எனப்படுகிறது.

செய்யும் முறை

முதலில் விரிப்பின் மீது நேராக நிற்கவும். கைகள் இரண்டும் பக்கவாட்டில் வைத்தபடி, முதுகு, கழுத்து, தலை ஆகியவை ஒரே நேராக இருக்கும் படி இருக்க வேண்டும்.

கால்களை அரை மீட்டர் தூரத்திற்கு பரப்பவும். கைகளை தோள் பட்டைக்கு நேராக நீட்டி உள்ளங்கை பூமியைப் பார்த்தபடி இருக்குமாறு செய்யவும்.

இடது கையை வலது தோள்பட்டையின் மீது வைக்கவும். வலது கையை முதுகுப் பக்கமாக உள்ளங்கை வெளிப்புறத்தைப் பார்த்தபடி வைக்கவும்.

தற்போது உங்கள் இடுப்பை எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு திருப்பவும். இடுப்புடன் சேர்ந்து தலையும் திரும்ப வேண்டும்.

ஒரு சில விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு மீண்டும் கைகளை விரித்த நிலைக்கு கொ‌ண்டு வர வேண்டும்.

இப்போது வலது கையை இடது தோள் பட்டையின் மீது வைக்கவும். இடது கையை முதுகுப் பக்கமாக உள்ளங்கை வெளிப்புறத்தை பார்த்தபடி வைக்கவும்.

மீண்டும் இடுப்பை முடிந்த அளவிற்கு திருப்பவும்.

இதே போன்று 2 பக்கங்களையும் மாற்றி மாற்றி 5 முறை செய்துவிட்டு ஓய்வு நிலைக்கு வரவும்.

குறிப்பு - இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் அதிக வலி இருப்பவர்கள் நிச்சயம் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

பலன்கள் - நெஞ்சு, இடுப்பு, தொடைப் பகுதிகளில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கிறது. உடல் அசதியையும், மன அழுத்தத்தையும் இந்த ஆசனம் குறைக்கிறது.

<< பாதஹஸ்தாசனம்  |  சூரிய நமஸ்காரம் >>