தமிழில் நல்லதோர் இணையத்தினை முன்வைக்கவேண்டும் என்பதே என் எண்ணம். எவ்வளவோ நல்ல இணையங்கள் ஏலவே இருக்கின்றன, இருந்தும் நானும் என்னுடைய முயற்சியால் ஒரு தமிழ் நூல்களின் தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய கற்கைகளை செய்துபார்க்கும் களமாகவும் இதனை உருவாக்கி மேம்படுத்தி வருகின்றேன்.

எவ்வித இலாபகரமான விடயங்களும் இன்றி தனியே, செய்துவிடவேண்டும் என்ற கருத்தே என் எண்ணத்தில். விடயங்கள் வேறு இணையங்களில் இருந்தும் எடுக்கப்படுவதால், இலக்கண, எழுத்துச் சீரின்மைகள் இருக்கலாம்.

காலப்போக்கில் எல்லாம் சீராக்கப்படும், நிறைய மாற்றங்கள் செய்ய விருப்பம், என்னோடு இணைத்திருக்கும் நல்ல மனங்களும் கருத்துக்களும் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள வழி செய்யும்.

அன்புடன் செ.அ.சுரேஸ்குமார். [http://www.facebook.com/saskumar]


அரசடி குறுக்கு வீதி,
கரவெட்டி வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம், இலங்கை.
தொலைபேசி : 0 (094) 71 53 64 797

ஆமை-முயல் போட்டி

அன்றோரு நாள் காட்டிலே
ஆமைக்கும் முயலுக்கும் போட்டியாம்

உச்சி மலை எல்லையை
முதலில் தொட்டால் ஜெயிக்கலாம்

ஹா ஹா முயல் சிரித்தது
ஆமையை பார்த்து சிரித்தது

முயலைக் கண்ட ஆமையும்
கர்வம் வேண்டாம் என்றது

போட்டி தொடங்கிய நேரமே
முயல் எடுத்தது வேகமே

பாதி தூரம் வந்ததும்
திரும்பி நின்று பார்த்தது

கண்ணுக் கெட்டிய தூரமே
காணவில்லை ஆமையை

ஆமை மெதுவாய் வந்ததால்
முயலும் கொஞ்சம் தூங்கிச்சு

மெதுவாய் வந்த ஆமையும்
முயலை முந்திச் சென்றது

எந்திரிச்ச முயல் அது
எல்லை நோக்கி ஓடிச்சு

கர்வம் கொஞ்சம் இருந்ததால்
கடைசியில் தோத்துப் போனது

திறமை அதிகம் இருந்தாலும்
கர்வம் மட்டும் வேண்டாமே

எல்லையில் இருந்த ஆமையும்
முயலைப் பார்த்து சொன்னது

<< குரங்கும் குல்லாய் வியாபாரியும்  |  சிங்கமும் முயலும் >>